HOME

 ஆடுகளம்
[நீள் வட்டம்] அல்லது [வட்டம்|வட்ட] வடிவில் அமைந்த கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் சுமார் 20 [[மீட்டர்]] * 3 மீட்டர் நீள அகலத்தில் பிட்ச் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப் பட்டும், புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்த பிட்சின் இரு முனைகளில் தலா மூன்று ஸ்டம்புகள் எனப்படும் தண்டுகள் நடப்பட்டிருக்கும்.  
          
ஆட்டம்
 முதலில் மட்டை பிடிக்கும் அணியினருள் இருவர் பிட்சின் இரு முனைகளிலும் நின்று கொள்வர். பந்து வீசும் அணியினர் பந்தினை தண்டுகள் மீது அடித்து வீழ்த்த முயற்சி செய்வர். தண்டுகளின் முன் நிற்கும் மட்டை பிடிப்பவர் பந்து தண்டின் மேல் படாமல் காக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் மைதானத்தில் அடித்துவிட்டு பிட்சின் ஓரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடலாம். இவ்வாறு எத்தனை முறை மட்டை வீசும் அணியினர் ஓடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் எனப்படும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், அடிக்கப்படும் பந்து மைதான எல்லையைத் தாண்டிவிட்டால் மட்டை பிடிக்கும் அணியினருக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும். பந்து தண்டு மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து தரையில் படாமல் நேராக பந்து வீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டை பிடிப்பவர் விலகிக்கொள்ள வேண்டும். மட்டை வீசும் அணியின் அடுத்த ஆட்டக்காரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஆட்டக்காரர்களை பந்து வீசுபவர் வீழ்த்த வேண்டும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகள் உள்ளன.
ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டை பிடிக்கும். ஆட்ட இறுதியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

                                                     ஆட்ட வகைகள்
டெஸ்ட் போட்டிகள்
இவ்வகை போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும்.

ஒரு நாள் போட்டிகள்
இவ்வகை போட்டிகள் [[1970]]களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் [[உலகக் கோப்பை கிரிக்கெட்]] போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப் படுகிறது.

துடுப்பாட்டம் விளையாடும் நாடுகள்
உலகில் மட்டைப்பந்தின் பரவல். ஆரஞ்சு நிறத்தில் உள்ள நாடுகள் ஐந்து நாள் போட்டி விளையாட தகுதி பெற்றவை. பச்சை நிறத்தில் உள்ளவை ஐந்து நாள் போட்டி விளையாடாத மற்ற முக்கிய ஐ.சி.சி உறுப்பு நாடுகள். ஊதா நிறத்தில் உள்ளவை மற்ற ஐ.சி.சி உறுப்பு நாடுகள்]]
ஐந்து நாள் போட்டிகள் விளையாடத் தகுதி பெற்ற நாடுகள் பின்வருவன
* இங்கிலாந்து
* ஆஸ்திரேலியா
* மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்
* நியூசிலாந்து
* தென் ஆப்பிரிக்கா
* இந்தியா
* பாகிஸ்தான்
* இலங்கை
* ஜிம்பாப்வே
* வங்கதேசம்